புதுடெல்லி,பேஸ்புக், டுவிட்டர் போன்று வாட்ஸ் அப் என்னும் தகவல்கள் பரிமாற்றம் செய்ய உதவும் சமூக வலைதளமும் உலக அளவில் பெரும்பாலோனாரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வாட்ஸ்
அப் அண்மையில் என்கிரிப்ஷன் பாதுகாப்பு அம்சத்தை புதியதாக அறிமுகப்படுத்தியது. இதன்படி தகவல்களை பரிமாறிக்கொள்பவர்களை தவிர மூன்றாம் தரப்பு இடை மறித்து தகவல்களை பெற முடியாது. இது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது.இந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்டை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுதிர் யாதவ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், இது போன்ற செயலிகள் தகவல்களை என்கிரிப்ட் செய்வதால் தீவிரவாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் உதவும் வகையில் உள்ளது. இந்த செயலிகளில் இடை மறித்து தகவல் பெறுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. தீவிரவாதிகளின் வழக்குகளில் இந்த பிரச்சினையை எதிர்கொள்வதாக விசரணை முகமைகள் ஒப்புக்கொண்டுள்ளன. சூப்பர் கம்ப்யூட்டரால் கூட இந்த தகவல்களை பெற முடியாது.தற்போது வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள 256 பிட் என்கிரிப்ட் எனப்படும் ஒரு சங்கேத குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம். வாட்ஸ் அப், வைபர், டெலிகிரம், ஹைக், மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால், இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 29 ஆம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.