7–வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிந்துரை அளிக்க உயர் அலுவலர் குழு அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:–முன்னோடித் திட்டங்கள்
* அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்துறைக்காக, 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 152.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* 1992–ம் ஆண்டில் முதல்–அமைச்சரால் துவங்கப்பட்ட ‘பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’, ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ போன்ற முன்னோடித் திட்டங்கள், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கியுள்ளன. 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்காக 140.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.திருமண உதவித் திட்டம்
* திருமண உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் திருமாங்கல்யத்திற்கான தங்கத்தை 8 கிராமாக முதல்–அமைச்சர் ஏற்கனவே உயர்த்தியுள்ளார். இந்தத் திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காகவும் 703.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* சத்துணவுத் திட்டத்திற்காக 1,644.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், 6 முதல் 36 மாதங்கள் வரை உள்ள 17.63 லட்சம் குழந்தைகளுக்கும், 2 முதல் 5 வருடங்கள் வரை உள்ள 13.97 லட்சம் குழந்தைகளுக்கும், 6.55 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், 4.02 லட்சம் வளரிளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 1,699.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உதவித் தொகை
* சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைத் திட்டங்களுக்காக 3,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* சமூகநலத் துறைக்காக 4,512.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* 2012–ம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 30–6–2016 அன்று நிறைவடைந்தது. தற்போது நீட்டிக்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக, சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் உச்சவரம்புத் தொகை 7.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, இந்தத் திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.* 7–வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து, அனைத்து அம்சங்களுக்கும் மத்திய அரசு முழுமையாக ஒப்புதல் அளித்த பின்னர், அவற்றை ஆய்வு செய்து, தமிழக அரசு அலுவலர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக இந்த அரசு, உயர் அலுவலர்கள் குழுவினை அமைக்கும்.மருத்துவ காப்பீட்டு திட்டம்
* நாட்டிலேயே முதன்முறையாக, 7 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறும் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தியது குறித்து, இந்த அரசு பெருமிதம் கொள்கிறது. 2016–2017–ம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பலன்களுக்காக, 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 18,868 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக 105.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.