WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 16, 2016

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு.


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25-ம், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு
முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மாதந்தோறும் 1-ஆம் தேதியும், 15-ஆம் தேதியும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.  ஒவ்வொரு மாநிலத்திலும் கலால் வரி விதிப்பில் வேறுபாடு காணப்படுவதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் காணப்படும். இதன்படி, விலைக் குறைப்புக்குப் பின், தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 62.51-ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.54.28-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்...:சென்னையில் பெட்ரோல் விலை ரூ.64.24-லிருந்து ரூ.62.00-ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், டீசலின் விலையும் ரூ.56.25-லிருந்து ரூ.55.82-ஆகக் குறைந்துள்ளது. ஒரே மாதத்தில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படுவது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்பு, கடந்த 1-ஆம் தேதி பெட்ரோலின் விலை 89 காசுகளும், டீசலின் விலை 49 காசுகளும் குறைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.