WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 9, 2016

வங்கியில் 400 புரபெசனரி அதிகாரி பணியிடங்கள்.


பிரபல வங்கியில் புரபெசனரி அதிகாரி வேலைக்கு 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:– பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆப் பரோடா.
தற்போது இந்த வங்கியில் இருந்து புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 202 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 108 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 60 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் உள்ளன. 9 மாத வங்கிப் பணி பயிற்சிக்குப் பின்னரே பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். இதற்காக மணிப்பால் வங்கிப் பணிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும், பணி நியமனமும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:–  வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1–8–2016 தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2–8–1988 மற்றும் 1–8–1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 9 மாத பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100–ம், மற்றவர்கள் ரூ.600–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21–8–2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். அவற்றை தேவையான இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதற்கான எழுத்து தேர்வு 25–9–2016 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.bankofbaroda.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.