WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 19, 2016

ஏழு ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வில்லை : ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர் புலம்பல்.

பணியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என, ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் புலம்புகின்றனர். 2009ல் ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தை செயல்படுத்த தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை மாநில அரசே நியமிக்க உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 2009ல் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்களுக்கு ரூ.7,800, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.6,000, கட்டடப்பொறியாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளைக் கடந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இவர்களைப்போல் எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என, புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.