Tuesday, August 30, 2016
பேராசிரியர் பணிக்கு ஓய்வு வயதில் விண்ணப்பம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ள, உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த, 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
பள்ளிக்கல்வித் துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது; விண்ணப்பப் பதிவு, ஜூலை, 30ல் முடிந்தது. பரிசீலனையில், 194 பேரின் விண்ணப்பங்கள், தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதில், 57 வயது வரையுள்ளோர்
விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர், ஓய்வு பெறும், 58 வயதில் விண்ணப்பித்து உள்ளார். இதேபோல், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவிப் பேராசிரியர் பணிக்கு, ஆக., 17 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன; வரும், 7ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. இந்த பதவிக்கு, ஏற்கனவே, 2014ல் முதற்கட்ட அறிவிப்பு வெளியான போது பலர் விண்ணப்பித்தனர். அவர்களில், 12 பேர் உட்பட மொத்தம், 206 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இந்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.