சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு,
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும், முஸ்லிம், கிறிஸ்துவ, பார்சி, ஜெயின், புத்த மற்றும் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர், http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி, ஆக., 31 என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, செப்., 30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.