பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி ஆசிரியர்களை கண்காணிக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு விபரம்: உதவி, தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுக்களை மாவட்டத்
தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும். ஒரு குழுவில் 2 பேர் இருக்க வேண்டும். இக்குழு பள்ளிகளை திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.
தொடர் புகார்கள், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளில் முக்கியமாக ஆய்வு நடத்த வேண்டும். ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவது, வேலை நேரம் முழுவதும் பள்ளியில் இருப்பது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மாணவர்களையும் கற்றல் அடைவு, தமிழ், ஆங்கில வாசிப்பு திறன், எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் சோதிக்க வேண்டும். குறிப்பாக 5, 8 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, கணக்குகள் செய்வதை கண்டறிய வேண்டும்.
ஆய்வு அறிக்கையை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். குறை இருந்தால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.