தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் காலிப் பணியிடத்திற்கு
விண்ணப்பிக்க செட் அல்லது நெட் அல்லது பி.எச்.டி முடித்து இருக்க வேண்டும். யு.ஜி.சி யின் விதி முறையும் இது தான்.ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை மட்டும் கடந்த திமுக ஆட்சியில் செட் நெட் முடித்தவர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாகவும் பி.எச்.டி முடித்தவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என TRB க்கு கடந்த தி.மு.க .அரசானது உத்தரவிட்டது.அதன்படியே பேராசிரியர் நியமனங்கள் நடைப்பெற்றது.இதனைத் தொடர்ந்து அதிமுக அரசும் 2013 ல் அறிவித்த பேராசிரியர் காலி பணியிடத்திற்கு தி.மு.க அரசின் மதிப்பெண்கள் முறையையே காப்பியடித்தது.விரைவில் வரப்போகும் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கும் மீண்டும் தி.மு.க அரசின் மதிப்பெண்கள் முறையையே 2013 TRB போல் பழைய மதிப்பெண்கள் முறையினையே காப்பி அடித்தால் போட்டித்தேர்வு எழுதிவிட்டு குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வரும் செட் மற்றும் நெட் தேர்ச்சிப் பெற்றவர்களை மிக மிக கடுமையாக பாதிக்கும் என தமிழகத்தில் செட் மற்றும் நெட் தேர்ச்சிப் பெற்றுள்ளவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.மேலும் என்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்குப் போட்டித் தேர்வு வைப்பதுப் போல் கலை & அறிவியல் கல்லூரி பேராசியர் பணியிடத்திற்கும் போட்டித்தேர்வு வைத்தே நியமனம் செய்ய வேண்டுமென செட் மற்றும் நெட் முடித்தவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.