சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை பெற, ஆண்டுக்கு இருமுறை, 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது. 2016 டிச., மாதத்திற்கான தேர்வு, 2017 ஜன., 22ல் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் உட்பட, 80க்கும் அதிகமான பாடங்களின் கீழ், இத்தேர்வு நடத்தப்படும். இம்முறை நடக்கும் தேர்வில் முதன்முறையாக யோகா பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம், இம்மாதம், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.