WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 30, 2017

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசின் 8300 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

                          mts
மத்திய அரசில் காலியாக இருக்கும் 8300 பல் செயல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.30) கடைசி நாளாகும்.

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல் செயல் உதவியாளர் பணிக்கு 8300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வழங்கப்படும்.

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் உண்டு. இப்பணிக்கு இணையதளம் மூலம் இன்று ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களைhttp://ssconline.nic.in அல்லது http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf என்ற இணையதள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.