அண்ணாமலை பல்கலைகழகத்தில் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பல்கலைகழக நிர்வாகம் முறைகேடாக நியமனம் செய்துள்ளது.நிறைய பாடப்பிரிவுகள் மாணவர்களுக்காக உருவாக்க படாமல் பணம் வாங்கி கொண்டு பணியிடங்களை நிரப்புவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் 11 மற்றும் 12 வகுப்பு படிக்கமால் (பழைய பியுசி) திறந்தநிலை பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர்களையும் மற்றும் போலிசான்றிதழ்கள் உடையவர்களையும் பணம்வாங்கி கொண்டு நியமித்துள்ளது.அப்பொழுது அது தனியார் பல்கலைகழகம். பிறகு மாணவர்களின் எண்ணிக்கையை விட முறைகேடாக நியமனம் செய்யபட்ட பேராசிரியர்களின் எண்ணிக்கை உயர்வாக இருந்தது.இதனால் பல்கலை கழக நிர்வாகம் சம்பளம் வழங்க திணறியது.அப்போதைய தமிழக அரசு அண்ணாமலை பல்கலைகழகத்துடன் நடத்திக்கொண்ட உடன்படிக்கையால் பல்கலைகழகத்தை தத்து எடுத்தது.இந்த நாடகம் கச்சிதமாக அரங்கேறியது.பிறகு 2016 ல் 367 பேராசிரியர்களை பணிநிரவல் என்ற பெயரில் அரசு கலைக்கல்லூரிக்கு அனுப்பியது.இதில் 120 பேருக்கு மேல் போலி சான்றிதழ் உள்ளவர்கள் என கண்டறியபட்டுள்ளது.இவர்கள் மீது நடவடிக்கை இதுவரை இல்லை. எதை கேட்டாலும் அரசின் கொள்கை முடிவு என்ற பதில் மட்டும் வருகிறது.தற்போது மேலும் 1080 பேராசிரியர்கள் வர உள்ளனர். 4722 ஆசிரியல்லா பணியாளர்கள் பணிநிரவலில் படிப்படியாக வர உள்ளனர். இதை எல்லாம் அரசியல் விமர்சகர்கள் விமர்சிப்பதில்லை. அவர்களும் இந்த முறைகேட்டிற்கு விலை போய்விட்டார்களா என தெரியவில்லை.
இந்த முறைகேட்டின் மீது சி.பி.ஐ விசாரணை தேவை. ஊழல் பெருச்சாளிகளையும் அதற்கு துணை போனவர்களையும் தமிழகம் கைகட்டி பார்க்கும்.இது சம்பந்தமாக விவாதமேடை நடத்துங்கள் என தொலைகாட்சி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டதற்கு மழப்பலான பதில்கள் கிடைத்தது.ஊமையான ஊடகங்களில் தி இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் செவி சாய்த்தன. இது மட்டுமல்லாமல் கால சக்கரம் ,தின இதழ் போன்ற ஊடகங்களும் இதனை தைரியத்துடன் வெளிப்படுத்தின என தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு தெறிவித்துள்ளது.இனிவரும் காலங்களிலாவது ஊடகதுறை இந்த ஊழலை வெளிகாட்டும் என்ற நம்புவதாக தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
Sunday, February 5, 2017
ஊழலான தமிழக உயர்கல்வித்துறை - ஊமையாய் இருக்கும் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.