WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 17, 2017

பட்டதாரி மாணவர்கள் கல்விக் கட்டணம் ரத்து திட்டத்துக்கு ரூ.680 கோடி ஒதுக்கீடு.


முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும் திட்டத்தை 2017-18 ஆம் ஆண்டிலும் செயல்படுத்த ரூ. 680 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நிதிநிலை
அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து உயர் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் ஆண்டில் 2.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 2017-18 ஆம் ஆண்டிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறைக்கு ரூ.3,680 கோடி: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் உயர் கல்வித் துறைக்காக 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூ. 3,680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.165 கோடி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மாணவர் உணவுக் கட்டணம் உயர்வு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆதிதிராவிடர் விடுதி கல்லூரி மாணவர்களுக்கான மாத உணவுக் கட்டணம் ரூ. 875-லிருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தப்படுகிறது. அதுபோல ஆதிதிராவிடர் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் ரூ.755-லிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் இந்த விடுதிகள் அனைத்துக்கும் சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது 30 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. 2017-18-ஆம் ஆண்டில் ரூ.30.73 கோடியில் 24 கூடுதல் விடுதிகள் கட்டப்படும். மொத்தத்தில் கட்டடங்கள் கட்ட ரூ.189 கோடியும், உணவுக் கட்டணங்களுக்காக ரூ. 120 கோடியும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உதவித் தொகை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகைக்கென ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதுபோல உயர் கல்வி பயிலும் இந்தப் பிரிவு மாணவர்களின் உதவித் தொகை திட்டத்துக்கென ரூ.1,580 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.