WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 7, 2017

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப் பட்டு உள்ளன.வரும், 2018ல் நடக்கவுள்ள பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டு உள்ளார். 

அதன் விபரம்:

l பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிகிறது; மே, 23ல் முடிவுகள் வெளியாகும்
l பிளஸ் 1க்கு, மார்ச், 7ல் துவங்கி, ஏப்., 16ல் முடிகிறது; மே, 30ல் தேர்வு முடிவு 
வெளியாகும்
l பிளஸ் 2க்கு, மார்ச், 1ல் துவங்கி, ஏப்., 6ல் முடிகிறது; மே, 16ல் தேர்வு முடிவு


அறிவிக்கப்படும்
l பிளஸ் 2க்கு, காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு, தேர்வு முடியும். 10ம் வகுப்பு, பிளஸ் 1க்கு, காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 12:45 மணிக்கு தேர்வு முடியும். இதில், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், விபரங்கள் பூர்த்தி செய்ய கணக்கில் எடுக்கப்படும்.

இன்னும் 267 நாட்கள்! : பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளதன் மூலம், மாணவ, மாணவியருக்கு, பள்ளி துவங்கும் நாளிலேயே பொதுத் தேர்வுக்கான அழுத்தமும், சுமையும் ஏற்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் முதல் நாளான, இன்று முதல், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 267 நாட்கள் உள்ளன. பிளஸ் 1 தேர்வுக்கு, 273 நாட்களும், 10ம் வகுப்பு தேர்வுக்கு, 
282 நாட்களும் உள்ளன.தனியார் பள்ளிகள், தேர்வுக்கான நாட்களை அறிவிப்பு பலகையில் எழுதி, பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.