WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 15, 2017

பள்ளி கல்விதுறையில் ஒரே நாளில் 37 அறிவிப்புகள்.

                                          
சட்டசபையில் பள்ளி கல்விதுறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. 
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், 
*சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது
*இந்த வருடம் புதிதாக 30 தொடக்க பள்ளிகள் துவங்கப்படும்
*அரிய வகை நூல்கள் ஆவணங்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படும்
*மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் பெரிய நூலகம்
*30 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள்
*கீழடியில் சிந்து சமவெளி உட்பட பழங்கால நாகரீகம் குறித்து சிறப்பு நூலகம்
*அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
*3 கோடி செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி
*நடப்பு நிதியாண்டில் புதிதாக 4084 ஆசிரியர்கள் நியமனம்
*மாதம் ரூ.7,500 சம்பளத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்
*17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்
*கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க நவம்பர் வரை அவகாசம்
*மெட்ரிக் பள்ளிகள் துவங்க இணையதளம் மூலம் அனுமதி
*மாணவியர் பயிலும் 5639 அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நாப்கின் மற்றும் அதனை எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்
*பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வல்லுநர் குழு கருத்து கேட்டு ஒரு வாரத்தில் சட்டசபையில் அறிவிப்பு
*486 அரசு பள்ளியில் கணிணி வழி கற்றல் மையங்கள்
*அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ், சிறுவர் இதழ் உள்ளிட்ட 37 அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.