WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 15, 2017

பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 1,439! நடப்பாண்டு கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்.


"சென்னையில், 1,439 குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்ற தகவல், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது, சமூக ஆர்வலர்கள்
மற்றும் கல்வியாளர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், சென்னையில் பள்ளி செல்லா குழந்தை, பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தை, பள்ளிக்கு செல்லாத மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்தது. இதில், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் கல்வி தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், குடிசை பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், தொழில் நிறுவனங்கள் நிறைந்த பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு செல்லாதோர், வட மாநில கட்டட தொழிலாளிகள் மற்றும் உணவக தொழிலாளர்களின் குழந்தைகள், வறுமை காரணமாக பள்ளியில் இருந்து இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் என, 1,439 குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகளுக்கு, ஓராண்டு சிறப்பு பயிற்சி, உண்டு உறைவிட வசதியுடைய பள்ளியில் கல்வி பயில்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓராண்டு சிறப்பு பயிற்சி பள்ளியில் படித்த மாணவர்கள், அதன்பின், மற்ற அரசு பள்ளிகளில் சக மாணவர்களுடன் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு, படிப்பு மட்டுமல்லாமல் அந்த மாணவர்கள் தொழிற்கல்வியிலும் சிறந்து விளங்க, ஆயத்த ஆடைகள் தயாரித்தல் மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்கள் தொழில் சார்ந்த திறன்களை வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, மீண்டும் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களிலும் நடத்தவும் திட்டமிடப்பட்டுஉள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவராஜன் கூறியதாவது. பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததில் இருந்து, அவர்கள் கல்லுாரி படிப்பு முடிந்து பணிக்கு செல்லும் வரை, எங்களது கண்காணிப்பு தொடரும்.இந்த குழந்தைகள், இணைப்பு சிறப்பு பயிற்சி மையம், உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம், தேசிய குழந்தைகள் தொழிலாளர் நல வாரியம் சார்பில் பள்ளி படிப்பு தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது உண்டு உறைவிட பள்ளியில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் கல்வி பயில, 20 ஆயிரம் ரூபாய் வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் வரை செலவு செய்கிறது.இவ்வாறு, பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 420க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகளின்ஆண்டு வாரியான புள்ளி விபரம்2015 - -20162,1522016- - 20172,1862017ல் தற்போது வரை1,439" - பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 1,439! நடப்பாண்டு கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் http://tz.ucweb.com/6_1f8fC

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.