WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 14, 2017

கல்வி அலுவலகங்கள் இரவிலும் சுறு... சுறு....

கல்வித் துறை மானிய கோரிக்கை தொடர்பாக, தேவைப்படும் தகவல்கள் அளிக்க, விடுமுறையின்றி கல்வி அலுவலகங்கள் ஜரூராக செயல்படுகின்றன.
கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பின், பிளஸ் 1 பொதுத் தேர்வு, முன்கூட்டியே பொதுத் தேர்வுகள் தேதி மற்றும் முடிவுகள் அறிவிப்பு என அடுத்தடுத்த புதிய அறிவிப்புகளை, அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், "கல்வித்துறை வரலாற்றில் அரசு பள்ளிகளை பாதுகாக்கும் வகையில், 41 புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். அவை ஜூன் 15ல் நடக்கும் கல்வி மானிய 
கோரிக்கையில் எதிர்பார்க்கலாம்," 
என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், என்னென்ன அறிவிப்பு வெளியிடலாம் என்பது குறித்து கல்வி அதிகாரிகள், ஓய்வு பேராசிரியர், கல்வியாளர் என அனைத்து தரப்பு வல்லுனர் குழு ஆலோசனை அடிப்படையில் '41 அறிவிப்புகள்' விவரம் தயாராகி வருகின்றன. இதற்காக, 'மாவட்ட முதன்மை கல்வி, தொடக்க கல்வி அலுவலகங்களில், எந்த நேரத்திலும் 
கல்வி தொடர்பாக தகவல்கள் திரட்ட வேண்டியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,' என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமான வேலை நாட்களை தவிர சனி, ஞாயிறும் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இரவு 10:00 மணி வரை அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.