WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 14, 2017

இளம் விஞ்ஞானி தேர்வு: ஜூலை 9ல் பதிவு.

மத்திய அரசின் இளம் அறிவியலாளர் ஊக்கத ்தொகைக்கான, கே.வி.பி.ஒய்., திட்டத்தில், எழுத்து தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, ஜூலையில் துவங்குகிறது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில், இளம் அறிவியலாளர்களை கண்டறிந்து, விருதுகளும், மேல் படிப்புக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இதன்படி, தேர்வு செய்யப்படும் இளம் அறிவியலாளர்களுக்கு, இளநிலை படிப்பின் மூன்று ஆண்டுகளும், மாதம், 5,000 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ரூ.28 ஆயிரம் : முதுநிலை படிப்புக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு, மாதம், 7,000 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு, 28 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பிரபல அறிவியல் நிறுவனங்களின், ஆராய்ச்சிக்கான முகாம்களில், இலவசமாக பங்கேற்க முடியும். இந்த திட்டத்தில் தேர்வு பெற, பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்.சி., என்ற இந்திய உயர்கல்வி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம், எழுத்து மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் முறை : இந்த ஆண்டுக்கான, எழுத்து தேர்வு, அக்., 29ல் நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 9ல் துவங்கி, ஆக., 23ல் முடியும் என, ஐ.ஐ.எஸ்.சி., 
அறிவித்துள்ளது. தற்போது, பிளஸ் 1 சேர்ந்த மாணவர்கள், எஸ்.ஏ., என்ற முதல் கட்ட தேர்வையும், பிளஸ் 2 சேர்ந்தவர்கள், எஸ்.எக்ஸ்., என்ற, இரண்டாம் கட்ட தேர்வையும், இளநிலை சேர்ந்தவர்கள், எஸ்.பி., என்ற மூன்றாம் கட்ட தேர்வையும் எழுத வேண்டும். கூடுதல் விபரங்களை, kvpy.iisc.ernet.inஎன்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.