பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் தொகுதி, தில்லை விடங்கன் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன்: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், கட்டடங்கள் கட்டப்படும். பாண்டியன்: இப்பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் தான் உள்ளன. அவற்றை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும். சிதம்பரத்தில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில், கிளை நுாலகம் உள்ளது. அதற்கும், புதிய கட்டடம் கட்ட வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: நுாலகத்திற்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நிதி ஒதுக்குங்கள். பள்ளிக்கு கட்டடம் கட்டப்படும். அ.தி.மு.க., - ராமச்சந்திரன்: குன்னம் தொகுதி, முள்ளிகுறிச்சியில், உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பகுதி மாணவ, மாணவியர், மேல்நிலை கல்வி படிக்க, 20 கி.மீ., செல்ல வேண்டி உள்ளது. எனவே, அப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: முள்ளிகுறிச்சி முல்லை மலராகும். தி.மு.க., - கிரி: செங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இட நெருக்கடி அதிகமாக உள்ளது. இறை வணக்க கூட்டம் நடத்த இடமில்லை; கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை. பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை இல்லாத பள்ளிகள் சில உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நடப்பாண்டு, பள்ளிகளில், 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.