ஆசிரியர், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், இரண்டு கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதி, மாநிலம்
முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளின் முதல் கட்ட ஆலோசனை கூட்டம், சென்னை, மாநில கல்லுாரி வளாகத்தில், நேற்று பிற்பகலில் நடந்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின், 63 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முடிவுகள் குறித்து, கூட்டமைப்பு செயலர் கணேசன் கூறியதாவது: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, முதல் கட்டமாக வரும், 18ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன்பின், அரசு தரப்பில் பேச்சு நடத்தாவிட்டால், ஆக., 5ல், சென்னையில் கோட்டையை நோக்கி, மிகப்பெரிய பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு, எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும். காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.