தமிழகத்தில், மின்சார வசதி இல்லாத, 439 பள்ளிகளுக்கு, மத்திய அரசு திட்டத்தில், மின் வசதி செய்து தர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மின் வசதி, குடிநீர், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அடிப்படை வசதியில்லாத பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், கிராமப்புறங்களில் உள்ள, ௪௩௯ தொடக்கப் பள்ளிகளில், மின் வசதி இல்லாதது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பள்ளிகளுக்கு, மத்திய அரசின், தீனதயாள் உபாத்யாய் கிராம ஜோதி திட்டத்தின் கீழ், மின் இணைப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதனால், மின் வசதியற்ற பள்ளிகளின் விபரங்களை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் சுற்ற றிக்கை அனுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.