சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற, ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒன்று முதல், 1௦ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையும்; பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிப்போருக்கு, மேல் படிப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிப்போருக்கு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில், உதவித்தொகை தரப்படுகிறது. இதை பெற தகுதி உள்ளவர்கள், ஆக., ௩௧க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, உதவித்தொகை பெறுவோர், புதுப்பித்துக் கொள்ள, ஜூலை, ௩௧க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதன் விபரங்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. மேலும், www.minorityaffairs.gov.in என்ற தளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.