தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு அமைத்த அலுவல் குழுவின் பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்'டம்பர் 30-
க்குள் பரிந்துரைகளை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அலுவல் குழுவின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து , இதன் பரிந்துரைகளை இறுதி செய்வதற்காக கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பரிந்துரைகளை செப்டம்பர் 30-க்கும் வழங்கும் பட்சத்தில், 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஊதியத்தை அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு இதற்கு முன்பு கடந்த 2006-ஆம் ஆண்டு ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இந்த ஊதியம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் மத்திய அரசின் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அலுவல் குழு வைஅமைத்து, தமிழக அரசு பிப்ரவரி 22-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த அலுவல் குழு தமிழக அரசு ஊழியர், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் , ஆசிரியர்கள் ஆகியோருக்கு மத்திய ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்களை ஆகியவற்றையும் ஆராய்ந்து 4 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த அலுவல் குழு தமிழகத்தில் கடந்த மே 26, 27, ஜூன் 2, 3-ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்பட பல்வேறு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது, அவர்கள் தரப்பில் மனுக்கள் குழுவிடம் அளிக்கப்பட்டன.
கடந்த ஊதியக்குழுவில் பாதிக்கப்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு இந்த ஊதிகக் குழுவில் ஊதிய விகிதங்களை மாற்ற வேண்டும் என முறையீடு செய்தன. இவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்கள், முறையீடுகள் தொடர்பாக அலுவல்குழு ஆராய்ந்து வருகிறது.
இந்த அலுவல் குழுவின் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இந்த அலுவல் குழுவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.