WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 4, 2017

தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றக்கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையை பின்பற்றக் கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க
வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழக மாணவர்கள் பின்தங்கினர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதன் மூலம் மாநில பாடத்திட்ட முறையில் பயின்ற மாணவர்களால் நீட் போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் கூட சிபிஎஸ்இ முறையே பின்பற்றப்படுகிறது. அதனால் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுகின்றனர். எனவே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.