தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்றுதுவங்குகிறது.
தமிழக அரசின், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,753 இடங்களில், பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கு, தமிழக அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
முதல் நாளான இன்று, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற பிரிவினருக்கு, நாளை முதல் கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பம் பெற்ற, 6,281 பேரில், 5,833 பேர் விண்ணப்பம் அனுப்பினர். அவர்களில், சரியான, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு,1,000 ரூபாய்; மற்றவர்களுக்கு, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதை, 'செயலர், தமிழ்நாடு, பி.எட்., மாணவர் சேர்க்கை, 2017 - 18' என்ற பெயரில், 'டிடி' என்ற, வங்கி வரைவோலையாக தர வேண்டும்.கவுன்சிலிங், 22ம் தேதி வரை நடக்கிறது. பி.இ., - பி.டெக்., படித்தவர்களுக்கு, வரும், 19ம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும். அவர்களுக்கு, 10 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, www.ladywillingdoniase.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.