போலீசார் அனுமதி திடீரென ரத்தானதால், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் பாதியில் முடிந்தது.அரசு பள்ளிகளில், ௧௬ ஆயிரத்து, ௫௪௯ பகுதி நேர ஆசிரியர்கள், ௨௦௧௨ல் நியமிக்கப்பட்டு, தற்காலிகஅடிப்படையில் பணிபுரிகின்றனர். பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று உண்ணாவிரதம் நடத்த, அனுமதி பெற்றிருந்தனர். இதில், அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்பதாக அறிவித்தனர். அதனால், நேற்று காலை உண்ணாவிரதம் துவங்கும் முன், போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, சென்னையை நோக்கி வந்தவர்களை, போலீசார் திருப்பி அனுப்பினர். அவர்களில் ஒரு தரப்பினர், தடையை மீறி நகருக்குள் நுழைந்து, உண்ணாவிரத இடத்தில் குவிந்தனர்.
'சட்டசபை நடக்கும் நிலையில், போராட்டம் நடத்தக் கூடாது' என, போலீசார் கூறினர்.
ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தை துவங்கினர். அரசியல் கட்சியினரும் பங்கேற்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம், போலீசார் மீண்டும் பேச்சு நடத்தி, மூன்று மணி நேரத்திற்கு பின், போராட்டத்தை கலைத்தனர். கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண் ஆசிரியைகளும் வெளியேற்றப்பட்டனர்.
கழிப்பறைக்கு பூட்டு : வள்ளுவர் கோட்டம் அருகே, தினமும் போராட்டம் நடத்தப்படுவதால், அதில் பங்கேற்கும் பெண்களுக்காக, மாநகராட்சி சார்பில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
போலீஸ் கெடுபிடியால், நேற்று கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டது. அதனால்,போராட்டத்துக்கு வந்த ஆசிரியைகள், கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.