அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்ற பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலப்பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கல்வி, கல்வி உதவித்தொகை, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், அரசு அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 1800 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களில் 83 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்களை நியமித் துக்கொள்ள துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் ரூ.2000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியரை நியமித்துக் கொள்ள முடியும். இந்த சம்பளத் தில் ஆசிரியர்களை எப்படி நியமனம் செய்ய முடியும்?
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்பவும், அவர்களுக்கு பெற் றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் ரூ.7500 சம்பளம் வழங்கவும் அனுமதி அளித்து பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பது வேதனையளிக்கக் கூடியது.
சட்டப்பேரவை மானியக் கோரிக் கையின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
134 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர்
ஈரோடு மாவட்டம் பர்கூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலமாக நடத்தப்படும் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் 134 பேர் படிக்கும் நிலையில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.