அரசு பொது தேர்வுகள் விடை திருத்தத்தில், கூட்டல் பிழை மற்றும் திருத்தலில் குளறுபடி செய்த ஆசிரியர்களிடம், விரைவில் நேர்முக விசாரணை நடத்தப்பட உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில், பிளஸ், 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், ஆண்டுக்கு, 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். பொது தேர்வு மதிப்பெண்களை வைத்தே, மாணவர்களின் உயர்கல்விக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. 6,000 பேர், மதிப்பெண்
பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தனர்.
இதில், பிளஸ் 2வில், 2,070 பேருக்கும், 10ம் வகுப்பில், 821 பேருக்கும், பிழைகள் இருந்தது
கண்டறியப்பட்டு
உள்ளது.
இதை தொடர்ந்து, விடை திருத்தத்தில் குளறுபடி செய்த ஆசிரியர்கள், மேற்பார்வையிடுவோர், மதிப்பெண் கண்காணிப்பாளர் என, 3,000 பேர்
பட்டியல் தயாரிக்கப்பட்டு
உள்ளது. அவர்களில், பெரும் தவறுகள் செய்தவர்களிடம், நேர்முக விசாரணை முடிந்துள்ளது.
மற்ற ஆசிரியர்களிடம், ஆக., முதல் வாரத்தில் தேர்வுத்துறையின் அதிகாரிகள் குழு, விசாரணை நடத்த
உள்ளது.
முடிவில், கல்வித்துறை இயக்குனர், செயலரிடம் விசாரணை அறிக்கை
தாக்கல் செய்யப்படும்.
அறிக்கையின்படி, விடை திருத்தத்தில் தவறுகளின் தன்மைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.