WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 2, 2017

'டெட்' தகுதி தேர்வு: முடிவுகள் வெளியீடு.

"ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான, 'டெட்' தகுதித் தேர்வு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில், ஏப்., 29, 30ம் தேதிகளில் நடந்தது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 2.41 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர்.இந்தத் தேர்வுக்கான தோராய விடைக்குறிப்பு, மே, 22ல் வெளியிடப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்பட்டன. பின், இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, கடந்த வாரம் விடை திருத்தம் முடிந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'டெட்' தேர்வு முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்; தோல்வி அடைந்தனர் போன்ற விபரங்களை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை." - 'டெட்' தகுதி தேர்வு: முடிவுகள் வெளியீடு http://tz.ucweb.com/7_6kX5

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.