தமிழக பாடத்திட்டம் மாற்றம் தொடர்பாக, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் இடம் பெறும், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 13 ஆண்டு பழமையானது. 10ம் வகுப்பு பாடத்திட்டம், ஆறு ஆண்டுகள் பழமை யானது. அவற்றை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என, கல்வி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, புதிய உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார்.
மற்ற உறுப்பினர்கள் விபரம்:
பள்ளி கல்வி செயலர் உதயசந்திரன், அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, இஸ்ரோ என்ற, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன இயக்குனர், விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை. மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.பி. விஜயகுமார், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுப்பிரமணியன்.
திருவள்ளுவர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜோதி முருகன், கல்வியாளர் ஆனந்தலட்சுமி, மத்திய இடைநிலை கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்கு னர் கார்மேகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலர், இயக்குனர்களில், யார் பதவியில் இருக்கின்றனரோ, அவர்கள் குழுவில் இடம்பெறுவர்.
கலைத்திட்ட குழு
பாடத்திட்டம் மாற்றுவது தொடர்பாக, கலை திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில், உறுப்பினர்களாக, கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜம், தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள்
துணை வேந்தர் சுந்தரமூர்த்தி, கோவை வேளாண் பல்கலை துணை வேந்தர் கு.ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், பெங்களூரை சேர்ந்த சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், சென்னை புதுக்கல்லுாரி, உயிரி தொழில்நுட்பவியல் துறை முன்னாள் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் பாலசுப்பிரமணியன்.
மேலும், கல்வியாளர் கலா விஜயகுமார், ஓவியர் டிராட்ஸ்கி மருது மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.