WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 6, 2017

தமிழக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் உயர்கல்விதுறை அமைச்சர் , நிதிஅமைச்சர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 05.07.2017 மாலை 2.10 மணி அளவில் கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா அவர்களை சந்தித்தனர். முதலில்  யு.ஜி.சி சம்பள உயர்வு கேட்டனர். அதாவது  அருகில் உள்ள மைசூர் பல்கலை கழகத்தில் வழங்கபட விருக்கும் ஊதிய பட்டியலை காண்பித்தனர். அதற்கு   ஊதிய உயர்வு சம்பந்தமாக அரசிடம் வலியுறுத்த உள்ளேன். ஊதிய உயர்வு உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். எதற்கும் மைசூர் பல்கலை கழக  கௌரவ விரிவுரையாளர்கள் காலி பணியிட அறிவிப்பில் உள்ள சம்பள பட்டியல் நகலை தாருங்கள் ,அரசுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். பிறகு பணி நிரந்தரம் அல்லது வர போகும் Arts and science  College trbயில் முன்னுரிமை   தரச் சொல்லி கௌரவ விரிவுரையாளர்கள் இயக்குனரிடம் கேட்டனர்.அதற்கு இயக்குனர் பின் வருமாறு பதிலளித்தார் அதாவதா " உங்களை பணி நிரந்தரம் செய்யவோ அல்லது Trb-யில்  முன்னுரிமை அளிக்கவோ  இயலாது , ஏனெனில் உங்களை Employment office மூலம் பணி அமர்த்தவில்லை அதுமட்டுமல்ல 55% குறைவான மதிப்பெண் பெற்றுள்ள கௌரவ விரிவுரையாளர் கூட உங்களுடன் பணிபுரிகிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் பணி நிரந்தரம் செய்ய இயலாது என உறுதியாக தெரிவித்தார். உடனடியாக கௌரவ விரிவுரையாளர் ஒருவர் குறுக்கிட்டு  பணி நிரந்தரம் சம்பந்தமாக File (கோப்பு) பரிசீலனையில் உள்ளதாகவும் (File moving from 3 rd table to 4 th table) என ஒரு சிலர் கூறுகிறார்கள் .அதன் உண்மைதன்மையை பற்றி கேட்டதற்கு, இயக்குனர் அவர்கள்  பணிநிரந்தரம் செய்வது பற்றி உங்களிடம் பொய்யான வாக்குறுதி தர விரும்பவில்லை. உண்மையில் இதுவரை தற்போதைய நிலவரப்படி  அப்படி அரசிடம் திட்டம் இல்லை.  அப்படி கூறுவதை கௌரவ விரிவுரையாளர்கள் ஆகிய நீங்கள்  நம்பாதீர்கள்  எனக் கூறினார். மேலும் நீங்கள் தற்போது கொடுக்கும் மனுவையும் அரசுக்கு பரிந்துரை செய்ய  அனுப்பவது என் கடமை .(  அது போலவே   தாங்கள் கொடுக்கும் இந்த பணி நிரந்தர மனுவும் சில அதிகாரிகள் இன்சியல் மற்றும் அவர்களின் மேசையில் உள்ள பதிவேடுகளில் Reg செய்து number பதிவு செய்து அரசுக்கு அனுப்பபடுகிறது.அது பல Table களை கடந்தே அரசுக்கு அனுப்பபடும். எந்த கோரிக்கை மனுவும் எடுத்த எடுப்பிலே நிராபரிப்பதில்லை) அது போல் பரிந்துரைக்கு  அனுப்புகிறேன் . எனவே பணி நிரந்தரத்துக்கு நான் உத்தரவாதம் தர இயலாது. மேலும் கௌரவ விரிவுரையாளர்களை எந்த மாநிலத்திலாவது பணி நிரந்தரம்  செய்திருந்தால் அதற்கான Evidence எனக்கு அனுப்பி வைங்க இல்லையெனில் வந்து தாருங்கள். தான்  2:30 மணிக்கு நடைபெறும் மீட்டிங் செல்ல வேண்டும் என கூறி விரைவு காண்பிக்க முற்பட்டதால் பிறகு தலைமை செயலகம் சென்று உயர்கல்வி துறை அமைச்சர்களை கௌரவ விரிவுரையாளர்கள் சந்தித்தனர்.அவரும் பணி நிரந்தரம் செய்ய இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.பிறகு சம்பளத்தை உயர்த்தி தர கேட்டதற்கு நீங்கள் இப்போ பேசுற விசயம்   உங்களின் இந்த கோரிக்கை மனுவில் இருக்கா என கேட்டார்.  ஆம் என்றதும்  , சரி நான் படிச்சி பார்க்கிறேன் என்று கூறி  செல்லுங்கள் என கூறிவிட்டார்.பிறகு கௌரவ விரிவுரையாளர்கள் சந்திக்க சென்ற போது உயர்கல்வி செயலர் மீட்டிங்கில் இருந்ததால் கோரிக்கைமனுவை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.பிறகு நிதி அமைச்சர் இல்லம் சென்று இரவு 8:25 மணி அளவில் கோரிக்கை மனு அளித்துவிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்த வந்த கௌரவ விரிவுரையாளர்கள் , மனுவின் மீதான அரசின் செயல்பாடுகளை பார்த்தபிறகு அடுத்த கட்டமாக அரசின் கவனத்தை பெற கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாம் என கலந்துபேசிய பின் வீடு திரும்பினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.