WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 12, 2025

சுதந்திர தின அறிவிப்பில் பணி நிரந்தரம் விடுதலை கிடைக்குமா! பகுதிநேர ஆசிரியர்கள் ஏக்கம்!!

சுதந்திர தினத்தை ஒட்டி இம்முறையாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்து உள்ளது.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் கூறியது:


15 வருட தற்காலிக வேலைக்கு விடுதலை கொடுத்து பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளத்தில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்ப்போடு ஏங்கி வருகிறோம்.


சொற்ப சம்பளம் 12,500 ரூபாயை வைத்து கொண்டு இந்த கால விலைவாசியில் எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை.


இந்த 15 ஆண்டில் மே மாதம் சம்பளம் இல்லாமலும், அரசு சலுகை இல்லாமலும் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கி உள்ளது.


பெரும் பகுதி தொகுப்பூதியத்தில் கழிந்துவிட்டது.


எஞ்சி இருக்கும் பணி காலத்தை நல்ல படியாக வாழ எங்களுக்கு காலமுறை சம்பளம் பணி நிரந்தரம் முதல்வர் வழங்க வேண்டும்.


அது திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் சொன்ன 181வது வாக்குறுதி தான்.


இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு அமைச்சரவை கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.


இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள்.


இதனால் தமிழக வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயருக்கும், திமுக ஆட்சிக்கும் புகழ் சேர்க்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.