'தமிழகத்தில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால், 208 அரசு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன' என, பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில், 58,924 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.21 கோடி மா ணவர்கள், 5 லட்சத்து, 34,799 ஆசிரியர்கள் உள்ளனர். இவற்றில், 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என, மொத்தம், 1,204 பள்ளிகளில், சேர்க்கை நடக்கவில்லை .
சுயநிதி பள்ளிகளில், 72 சதவீதம், மற்ற பள்ளிகளில், 28 சதவீதம் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதற்கு, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே முக்கிய காரணம். அரசு, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணமல்ல.
அதாவது, 2011ல், 1 வயதுக்கு ள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை, 10.74 லட்சமாக இருந்த நிலையில், 2016ல், 10.45 லட்சமாகவும், 2021ல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது.
அடுத்த ஆண் டில், 8.78 லட்சமாக குறையும் என, 2020ல் வெளியிடப் பட்ட மத்திய மக்கள் தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள், தொலைதுார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், பள்ளிகளில் சேரும் வயதில் குழந்தைகள் இல்லை. கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், ஊத்துப்பட்டி பள்ளியில் படித்த நான்கு மாணவ, மாணவியரின் பெற்றோர் இடம் பெயர்ந்தனர்.
அவர்களில் மூன்று மாணவர்கள், எல்லை மேட்டுப்பட்டி புதார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும், மற்றொரு மாணவி சின்னதாராபுரம் ஆர்.சி உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் படிக்கின்றனர். அதனால், யாரும் இடைநிற்றலில் இல்லை.
பெற்றோர் தங்களின் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி சேர்த்து, ஆங்கில வழிக்கல்வி பெறுவதை பெருமையாக கருதுவதாலும், பெற்றோர் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதாலும், கிராமப்புற பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்டமைப்புகளை மேம்படுத்தியும், மாணவர் சேர்க்கையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.