தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில், இயற்பியலில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை; தோல்வி அடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, தன்னாட்சி பெறாத, இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் வளாகத்தில் உள்ள கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகளின், தேர்வு முடிவுகள், ஜூலை, ௧௧ல் வெளியாகின. ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்ற நிலையில், ௪௦ சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெறவில்லை; ஏதாவது ஒரு பாடத்திலாவது தோல்வி அடைந்துள்ளனர்.அதிலும், 2016ல், பிளஸ் ௨ முடித்து, இன்ஜி., கவுன்சிலிங்கில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர், இயற்பியல் பாடத்தில் தோல்வியுற்றுள்ளனர். இதுகுறித்து, ஆய்வு செய்ய, அண்ணா பல்கலை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருத்தத்தில் குளறுபடியா? : இந்த ஆண்டு, இன்ஜி., விடைத்தாள்களை திருத்தியதில் குளறுபடி நடந்துள்ளதாக, கல்லுாரிகள் அதிருப்தி அடைந்துள்ளன. விடை திருத்தத்தில், தகுதியான பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கல்லுாரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விடை திருத்தும் போது, சில பாடங்களுக்கு, விடைக்குறிப்பையே பல்கலை., வழங்கவில்லை என்றும், புகார் எழுந்துள்ளது. அதனால், இந்த ஆண்டு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கிளன் எண்ணிக்கை அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.