சிறப்பு பாட ஆசிரியர் நியமனத்துக்கான, பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 2012ல், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், சிறப்பு பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, தொகுப்பூதியத்தில், மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கேட்டு, போராடி வருகின்றனர்.
இந்நிலையில், போட்டி தேர்வுகள் மூலம், ஓவியம், தையல், இசை மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றில், 1,188 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
போட்டி தேர்வுக்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது; ஆக., 19ல், தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான பாடத்திட்டம், நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை செயலராக சபிதா இருந்த போது, 2015ல், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே பாடத்திட்டம், இந்த போட்டி தேர்வுக்கு பின்பற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.