WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 11, 2017

அரசு பள்ளிகளில் வருகிறது தொன்மை பாதுகாப்பு மையம் : 'பழமை போற்றும்' கல்வித்துறை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 'தொன்மை பாதுகாப்பு மையங்கள்' ஏற்படுத்த 
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தலுடன் கூடுதல் திறமைகளை வளர்க்கவும், சேவை சார்ந்த செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தவும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, ரெட் ரிப்பன் கிளப், சாரண சாரணீயர், சுற்றுச்சூழல் மன்றம், பசுமைப் படை உட்பட பல்வேறு மன்றங்கள், அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் 'தொன்மை பாதுகாப்பு மையம்' ஏற்படுத்தி, அதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க செயலாளர் உதயச்சந்திரன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்துறையில் செயலாளர் உதயச்சந்திரன் பல்வேறு மாற்றங்கள், புதுமைகளை செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தான் 'தொன்மை பாதுகாப்பு மையம்' ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழக நாகரிகம் மிக தொன்மையானது. மதுரை அருகே உள்ள கீழடி போல், பல மாவட்டங்களில் வரலாற்று சின்னங்கள், பழங்கால பொருட்கள், அரிய கல்வெட்டுக்கள், முதுமக்கள் தாழி போன்றவை பூமிக்கடியில் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை தொல்லியல் துறையினர் 
அவ்வப்போது கண்டுபிடிக்கின்றனர். இவை பழங்கால நாகரிகம், பண்பாடு, 
மக்களின் வாழ்வியலை பறைசாற்றுகின்றன.
இதுதொடர்பாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இம்மன்றங்களை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார். வரலாற்று பாடத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்களையே இம்மன்றங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.