WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 27, 2018

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்த வாரம் துவங்குகிறது.
வரும், 2ம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும், செய்முறை தேர்வை துவங்கி, பிப்., 16க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வை முறைகேடின்றி நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.