WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 25, 2018

முதுநிலை மருத்துவ படிப்பு 'நீட்' தேர்வு முடிவு வெளியீடு.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவு தேர்வு முடிவுகள், https://neetpg.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலையில், எம்.டி., - எம்.எஸ்., என்ற பட்டமேற்படிப்பு மற்றும் டிப்ளமா மேற்படிப்புக்கு, 23
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும், 8,000 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இந்நிலையில், 2018 -19 கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, ஜன., 7ல், நாடு முழுவதும், 123 நகரங்களில், ஆன்லைன் முறையில் நடந்தது. இந்த தேர்வை, தமிழகத்தில் இருந்து, 20 ஆயிரம் பேர் உட்பட, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான முடிவுகள், வரும், 30ம் தேதி வெளியிடப்படும் என, தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று நேற்று முன்தினம் இரவு, https://neetpg.nbe.edu.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவுகளை, தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.