WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 23, 2018

இக்னோ பல்கலையில் கல்வி கட்டண சலுகை.

இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இக்னோவில், நடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நடந்து வருகிறது, வரும், 31ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என, பல்கலையின் மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார். மேலும், இக்னோ பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமா உள்ளிட்டவற்றில் சேரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். மத்திய மனிதவள அமைச்சக திட்டத்தின் கீழ், கட்டண விலக்கு வழங்கப்படும். விலக்கு கேட்பவர்கள், பல்கலை அதிகாரிகளை அணுகலாம் என, இக்னோ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.