WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 25, 2018

TNPSC EXAM திருச்சி, நெல்லை தேர்வு மையங்கள் ரத்து.

ரசாயனவியல் நிபுணர் பதவிக்கான தேர்வில், திருச்சி, திருநெல்வேலி மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு துறைகளில், இளநிலை ஆய்வாளர், இளநிலை ரசாயனவியல் நிபுணர், ரசாயனவியல் நிபுணர், தொல்பொருள் ஆய்வு ரசாயன நிபுணர் பதவிக்கு, பிப்., 17, 18ல், தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு உட்பட்ட பகுதியில் குறைந்த எண்ணிக்கையில், விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே, திருநெல்வேலி மற்றும் திருச்சி மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தேர்வு எழுத உள்ளோருக்கு, மதுரை மையங்களில் இடங்கள் வழங்கப்படும். தேர்வர்களுக்கு, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விரைவில், ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.