WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 5, 2018

312 மையங்களில் இன்று 'நீட்' பயிற்சி துவக்கம்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு, சிறப்பு பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பில், நீட் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'தமிழகம் முழுவதும், 412 மையங்களில் நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதில், 100 மையங்கள் மட்டும், முதற்கட்டமாக, ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டன. இந்நிலையில், மீதமுள்ள, 312 மையங்களிலும், இன்று முதல் பயிற்சி துவங்குகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.