WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 26, 2018

எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் புதிய மாற்றம்.

                                          

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார்நிர்வாகங்களின் கீழ், 57 ஆயிரம் பள்ளிகள்உள்ளன. இதில், அரசு பள்ளிகள் மட்டும், 37 ஆயிரம். அவற்றில், 24 ஆயிரம் தொடக்கபள்ளிகள்; 7,200 நடுநிலை; 3,000 உயர்நிலை; 2,800 மேல்நிலை பள்ளிகள் உள்ளன.தொடக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலைமற்றும் மேல்நிலை பள்ளி என, தனித்தனிவளாகங்களில் இயங்குவதால்,மாணவர்கள், அவ்வப்போது பள்ளி மாறவேண்டிய சூழல் ஏற்படுகிறது.ஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

இதன் காரணமாக, பல மாணவர்கள், மாற்று சான்றிதழ் பெற்று, பின், எந்த பள்ளியிலும்சேராமல், படிப்பை பாதியில் விடுகின்றனர். அதை தவிர்க்க, ஒரே வளாகத்தில், எல்.கே.ஜி.,முதல், பிளஸ் 2 வரை படிக்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஒன்று என, 32 பள்ளிகளில்,எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க வசதி செய்யப்படுகிறது. இதைபடிப்படியாக, வட்டார அளவில் விரிவுபடுத்தவும், பள்ளி கல்வி துறை முடிவு செய்துஉள்ளது.

இதுகுறித்து, சென்னையில் நடந்த, முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், பள்ளிகல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் விவாதித்துள்ளார். அப்போது, &'இந்ததிட்டத்தை, உடனே செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுகுறித்து,அரசியல் ரீதியான பிரச்னைகள் வந்தால், அவற்றையும் எதிர்கொண்டு, இந்த மாற்றத்தைஏற்படுத்த வேண்டும்&' என, அவர் குறிப்பிட்டு உள்ளார். இத்திட்டம் அமலுக்கு வந்தால்,ஒன்றுடன் ஒன்று என, பல பள்ளிகள் இணைக்கப்படும். அதனால், குறைந்தபட்சம், 1,000 பள்ளிகளுக்கு மேல் மூடப்படும் என, தெரிகிறது.

பள்ளிகள் இணைப்பு ஏன்?

அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்ததால், பல பள்ளிகளில், 10க்கும் குறைவானமாணவர்களே உள்ளனர்; ஆனால், தலா, இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.அவர்களுக்கு, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை, ஊதியமாக செலவிடப்படுகிறது.உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளால், கடும் நிதிச்சுமைஏற்படுகிறது. மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக, 3,003 பள்ளிகளுக்கு, மத்தியஅரசின் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, இந்த பள்ளிகளை, ஒன்றுடன் ஒன்று இணைக்க, பள்ளி கல்வி முடிவுசெய்துள்ளது. இதற்காக, ஒரே வளாகத்தில், பிளஸ் 2 வரையிலான கல்வி என்றதிட்டத்தை, அமல்படுத்த வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்விவட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.