அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு பள்ளிகளில், 2012ல், தொகுப்பூதியம் அடிப்படையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.இவர்களுக்கு மாதம் தோறும், 7,700 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், நேற்று, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
அந்த வளாகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகத்தை முற்றுகையிட்டனர். இதில், மாநிலம் முழுவதும் இருந்து, நுாற்றுக்கணக்கான ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.