WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 26, 2018

350 வீடியோ பாடங்கள்: மாணவர்களுக்கென வெளியீடு.

                                           


பிளஸ் 1, பிளஸ் 2 மாண வர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசின் சார்பில், 350, வீடியோ பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக,செங்கோட்டையன், செயலராக,உதயசந்திரன், முதன்மை செயலராக,பிரதீப் யாதவ் ஆகியோர் பதவியேற்ற பின்,இத்துறையில், புதிய மாற்றங்கள்செய்யப்பட்டு வருகின்றன. செயலர்,உதயசந்திரன், சமீபத்தில், வேறு துறைக்குமாற்றப்பட்டார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப் படி, அவர்தலைமையிலான குழுக்கள் உருவாக்கிய,புதிய பாடத்திட்டம், மாணவர்கள் மற்றும் கல்வி யாளர்கள் மத்தியில், வரவேற்பைபெற்றுள்ளன.இந்த பாடங்களை படித்து, பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற,மாணவர்கள் பலர், தனியார் மையங்களில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். 

டியூஷன்

ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால், &'டியூஷன்&' செல்லமுடியவில்லை. அவர்களின் வசதிக்காக, தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில்,இணையதளத்தில் சிறப்பு பயிற்சி பாடங்கள், வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன.அவற்றை, &'கூகுள்&' மற்றும், &'யூ டியூப்&' தளங்களில், TNSCERT என்ற பெயரில்பெறலாம்.

இந்த தளத்தில், இயற்பி யல், கணிதம், வேதியியல், உயிரியல், தாவரவியல் மற்றும்விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில், 350 வீடியோ பதிவுகள் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு பாடத்தையும், எளிதாக புரிந்து படிக்கும் வழிகளும், அவற்றில்கூறப்பட்டுள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்,இந்த, யூ டியூப் சேனல் இயக்கப்படுகிறது.

தற்போது, பள்ளிக்கல்வி இயக்குனராக உள்ள, ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில்,மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த சேனல் துவங்கப்பட்டது. முதலில், தொடக்க பள்ளிமாணவர்களுக்கான பாடங்கள் மட்டும் வெளியிடப்பட்டன.

தயாரிப்பு குழு

தற்போது, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்,அறிவொளி மேற்பார்வையில், தனியாக, வீடியோ பாட தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுஉள்ளது.இக்குழுவைச் சேர்ந்த, ஆசிரியர், ஜெரோம் கூறியதாவது:புதிய பாடங்கள்,மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில், வீடியோ பாடங்களாகதயாரிக்கப்படுகின்றன. நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், சேவை அடிப்படையில், இந்தபணியில் ஈடுபட்டுஉள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், கட்டணமின்றி,இந்த சேவையை பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்





No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.