இயக்குனரின் உத்தரவை மீறி, பல தனியார் பள்ளிகள், காலாண்டு தேர்வு விடுமுறையில் முழு நேரம் வகுப்பு நடத்தி வருகின்றன. கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.காலாண்டு தேர்வுக்கு பின், கடந்த 25ம் தேதி முதல் 2ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில், குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டிருந்தார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்தும், சிறப்பு வகுப்புகள் அனுமதிக்க வேண்டாமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், கோவையில் பெரும்பாலான பள்ளிகள், முழுநேர வகுப்பு நடத்தி வருகின்றன.பெற்றோரிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும், இச்சிறப்பு வகுப்புகள் குறித்து, சிலர் முதன்மை கல்வி அலுவலகத்தில், போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாவட்ட கல்வி அலுவலர் (நகர்) கீதாவிடம் கேட்டபோது,&'&'கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும், பெற்றோர் அனுமதி வழங்கினால், அரைநாள் வகுப்பு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி, வகுப்புக்கு வர வைக்க கூடாதென, சி.இ.ஓ., அறிவுறுத்தியுள்ளார். உத்தரவை மீறும் பள்ளிகள் குறித்து, பெற்றோர் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.
Thursday, September 27, 2018
உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள்; கல்வித்துறை கண்டுகொள்ளாதது ஏனோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.