Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
What's New?
All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai - 600 032. Website: tn.gov.in
TRB prepares the merit list only. All matters concerning Appointments and Posting should be got clarified from the concerned User Departments.
HELP LINE
044 - 28272455, 7373008144, 7373008134
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒன்றாம் முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் (TET) என்னும் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பருக்குள் நடத்தப்படும் - தேர்வு வாரியம் அறிவிப்பு! மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் இந்த வகை ஆசிரியர்கள் CTET என்னும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வினை தேர்வு
வாரியம் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் சுமார் 1 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சியடைந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையின்படி, ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு என்று வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் காத்திருந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2018 டிசம்பர் மாதத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.