WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 17, 2018

'டெட்' தேர்வு தேதி: 2 வாரத்தில் அறிவிப்பு.

'ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டு, அக்., 6 மற்றும், 7ல், டெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால், நடக்கவில்லை.இந்நிலையில், 'இந்த மாத இறுதிக்குள், டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் தரப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த தகவலை, அவர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.