பள்ளி ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஓரிரு வாரங்களில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ("டெட்') எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "டெட்' தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த 15 நாள்களில் அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டு விடும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.