WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 15, 2018

மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க வேண்டும்.

'அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும், மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக அரசு பள்ளிகள் தொடர்பாக வெளியாகும், எந்த புள்ளி விபரமும், திருப்தி அளிப்பதாக இல்லை. அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலை அளிக்கும் நிலையில், இடைநிற்றல் விகிதமும், வேகமாக அதிகரித்து வருகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும், ஒவ்வொரு மாணவருக்கும், 30 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக செலவிடப்படுகிறது. 'லேப்டாப்' உள்ளிட்ட, 14 வகையான பொருட்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன; கல்வி உதவித்தொகையும் தரப்படுகிறது.அப்படியும், ஏழை குடும்ப மாணவர்கள் கூட, அரசு பள்ளிகளுக்கு வருவதில்லை; வந்தாலும், தொடர்ந்து படிப்பதில்லை. இதிலிருந்தே, இலவசங்கள், நிதியுதவிகளை தாண்டி, வேறு ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அந்த குறையை கண்டு பிடித்து, அவற்றை களைய வேண்டும்.'அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து பிரசாரம் செய்து, இடைநிற்றலை கட்டுப்படுத்த உள்ளோம்' என, மத்திய அரசிடம், தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளிகளில், கட்டமைப்பு இல்லாமல், இத்தகைய பிரசாரம் பயனளிக்காது. கல்வித்தரம் சிறப்பாக உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகம் உள்ளது; அந்த பள்ளிகளில், இடைநிற்றல் என்ற, பேச்சுக்கே இடமில்லை.எனவே, இடைநிற்றலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய, நடவடிக்கைகள் குறித்து, உத்திகளை வகுக்க, கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை, நேர்மையாக செயல்படுத்தினால், இடைநிற்றலை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.