மத்திய அரசின், தகவல் தொழில்நுட்ப வழி கல்விக்கான விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அரசு பள்ளிகளில், தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், தகவல் தொழில் நுட்பமான, 'இன்பர்மேஷன் டெக்னாலஜி'யை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசின், ஐ.சி.டி., விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு தேசிய அளவில், 43 பேருக்கு, ஐ.சி.டி., விருதை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் நிறுவனமான, தேசிய கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. மொத்தம், 13 மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.இதில், ஜி.செல்வகுமார், பி.கருணைதாஸ், வி.லாசர் ரமேஷ் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு, வரும், 21ல், டில்லியில் நடக்கும் விழாவில், விருது வழங்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.